மாஸ்டர் பாடல்கள் படைத்த மாஸ் சாதனையால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெரெமியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியான முதல் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் OTT-யிலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.
இந்த படத்தின் பாடல்கள் பல தளங்களில் பல சாதனைகளை படைத்திருந்தன. தற்போது Spotify தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த படத்தின் பாடல்கள் Spotify தளத்தில் இதனை செய்யும் முதல் தமிழ் பட ஆல்பம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது,இதனை ரசிகர்கள் உற்சாகமாக ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
716 Views
Comments