ஒன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார்...

ஒன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் செய்துள்ளார்.
ஒருநாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ்.
இவர் ஸ்விக்கி மூலம் மூன்லைட் ரெஸ்டூரண்ட் எனும் உணவகத்தில் உணவு ஆர்டர் செய்ததாகவும் டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் கரப்பான் பூச்சி உடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல் முறை அல்ல என்றும் மூன்லைட் ரெஸ்டூரண்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
755 Views
Comments