புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
02

புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி

புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி

2025ஆம் ஆண்டின் முதலாவது இருபதுக்கு 20 போட்டியை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

 

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

 

அணி சார்பில் குசல் பெரேரா சதம் கடந்து 101 ஓட்டங்களை பெற்றார்.

 

அணித்தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களை பெற்றார்.

 

219 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

 

அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 69 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில்  சரித் அசலங்க 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

எவ்வாறாயினும் 03 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 1 என நியூஸிலாந்து அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

views

81 Views

Comments

arrow-up