இலங்கை அணியுடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை அணியுடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
வெலிங்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 56 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
179 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 180 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
அணி சார்பில் வில் யங் 90 ஓட்டங்களை பெற்றார்.
72 Views
Comments