பராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பிரதமரை சந்தித்தனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
08

பராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பிரதமரை சந்தித்தனர்

பராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பிரதமரை சந்தித்தனர்

ஜப்பானின் டோக்கியோவில் 2020 பராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிவதில் புதிய உலக சாதனை படைத்த தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் கொடித்துவக்கு ஆகியோர் இன்று (08) அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

 

இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கு இந்த வெற்றி ஒரு சான்று என்று பராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

 

இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய வெற்றிக்கு இலங்கைக்கு வழிகாட்டிய பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

 

விளையாட்டு சாதனைகளை அடைவதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

 

பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த மற்றும் சமித துலான் ஆகியோர் இந்த வெற்றியை அடைய உறுதுணையாக இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

views

187 Views

Comments

arrow-up