நாளை கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

அடுத்த பாராளுமன்ற வாரத்தைத் திட்டமிட கட்சித் தலைவர்களின் சம்மதத்தைப் பெறுவதே இதன் நோக்கம் என்று சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் இரண்டு நாட்களுக்கு பாராளுமன்றம் கூட்ட திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கு கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு இந்த வாரத்தின் ஒரு நாளில் நடைபெறும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
source:newsfirst
688 Views
Comments