வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 150 மில்லிமீட்டர் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 - 12 மணி நேரத்தில் தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் நகரும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
78 Views
Comments