மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
12

மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலை 2.5 - 3 மீட்டர் வரை உயரும் சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

views

133 Views

Comments

arrow-up