பதியத்தலாவ இளைஞர் கொழும்பில் கொலை

புறக்கோட்டை, இரண்டாம் குறுக்குத் தெருவை அண்மித்து அப்துல் காதர் வீதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்தது.
இன்று(05) அதிகாலை இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை - பதியத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
118 Views
Comments