கல்வியை மேம்படுத்த பிரதமரின் புதிய திட்டம்

ஆரம்ப கல்வி மற்றும் மேம்பாடு தொடர்பில் தேசியக் கொள்கையொன்றை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிக்கிறார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
மத்திய மற்றும் மாகாண மட்டங்களில் ஒரே வகையில் பொருந்தக்கூடிய வகையில் தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இதற்கான குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
64 Views
Comments