குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கம்

நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றங்களின் ஊடாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் கைவிரல் அடையாளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஊடாக குற்றவாளி ஒருவர் மீண்டும் குற்றம் புரிந்தால் மிகக்குறுகிய நேரத்தில் அவரது தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென பொலிஸார் தெரிவித்தனர்.
2013ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கத்தினூடாக பல குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தவிர குற்றவாளிகளின் முகங்களை அடையாளங்காணும் தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எதிர்காலத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
24 Views
Comments