மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு விரைவில் தீர்வு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
22

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு விரைவில் தீர்வு

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு விரைவில் தீர்வு

மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிர்வரும் வாரங்களில் வழமைக்கு கொண்டுவரப்படுமென கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் விசேட கலந்துரையாடல் நடைபெறும் என பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன கூறினார்.

சில பல்கலைக்கழகங்களில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாமதம் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் கூறினார் 

views

38 Views

Comments

arrow-up