மெதிரிகிரிய இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த 6 பேர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
16

மெதிரிகிரிய இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த 6 பேர் கைது

மெதிரிகிரிய இசை நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த 6 பேர் கைது

மெதிரிகிரிய, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பான காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பாடகர்கள் முன்கூட்டியே அறிவித்தமைக்கமைய வருகை தராமை காரணமாக குறித்த இசை நிகழ்ச்சியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

 

ஏற்பாட்டாளர்களால் பாடகர்களுக்காக வழங்கப்படவிருந்த பணம் தொடர்பில் எழுந்த பிரச்சினையே இதற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த சிலரால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஒலிபெருக்கிகள், இசைக்கருவிகள், கதிரைகள் என்பவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் காணொளிகளுக்கு அமைய விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

views

45 Views

Comments

arrow-up