மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

தடைப்பட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008ஆம் இலக்க விசேட விரைவு ரயில், கம்பளை - உலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (09) பிற்பகல் தடம்புரண்டது.
இதன்காரணமாக தண்டவாளம் சேதமடைந்தமையினால் மலையக மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து இன்று காலை வரை பாதிக்கப்பட்டிருந்தது.
தண்டவாளத்தினை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையினைத் தொடர்ந்து இன்று காலை முதல் தடைபட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
39 Views
Comments