மட்டக்களப்பு மார்க்க ரயில் நேர அட்டவணையில் திருத்தம்

மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் ரயிலில் மோதி விபத்திற்குள்ளாவதை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இரவு நேரத்தில் பயணிக்கும் ரயில்களில் காட்டு யானைகள் மோதி விபத்திற்குள்ளாவதை தவிர்ப்பதற்கு மேலதிமாக வேகக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நீண்ட மற்றும் குறுகிய கால திட்டங்களை வகுத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2025 மார்ச் 7ஆம் திகதி முதல் இந்த திருத்தங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
36 Views
Comments