உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 தமிழ் கட்சிகள் இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 தமிழ் கட்சிகள் இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
யாழ்.இணுவிலில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.ரவீந்திரா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன், தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவ கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் கட்சிகள் போட்டியிடவும் இதன்போது தீர்மானிக்கப்படுள்ளது.
40 Views
Comments