முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 494,000 ரூபாவை சிலாபத்திலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளை கோரியதன் ஊடாக இலஞ்ச ஊழல் தடைச்சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் முன்னாள் அமைச்சரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி மஞ்சுள திலக ரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
39 Views
Comments