சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய புதிய வேலைத்திட்டங்கள் - நீதியமைச்சர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
12

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய புதிய வேலைத்திட்டங்கள் - நீதியமைச்சர்

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய புதிய வேலைத்திட்டங்கள் - நீதியமைச்சர்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.

 

சில சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பல வருடங்கள் செல்வதாக அவர் கூறினார். 

 

துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

 

காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக நீதியமைச்சர் கூறினார்.

 

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரே வழக்கு தாக்கல் செய்வதாகவும் அவரது பணிக்குழாத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்  தெரிவித்தார்.

 

எவ்வாறாயினும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணைகளை விரைவில் முடிவுறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார நம்பிக்கை வௌியிட்டார். 

views

49 Views

Comments

arrow-up