உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பிரிவுக்கான செயன்முறைப் பரீட்சை ஆரம்பம்

2024 கல்விப் பொதுத்தராதர உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பிரிவிற்கான செயன்முறைப் பரீட்சை ஆரம்பமாகின்றது.
அடுத்த மாதம் முதலாம் திகதி வரை பரீட்சை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 14 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்த செயன்முறை பரீட்சை நடைபெறுதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.
பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் பரீட்சைக்கு தோற்றும் திகதியும் பரீட்சை மத்திய நிலையமும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இந்த இருவிடயங்களும் எக்காரணத்திற்காகவும் மாற்றப்படாதெனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
பரீட்சார்த்திகள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் பரீட்சை நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக சமுகமளிக்க வேண்டியது கட்டாயமானதெனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
80 Views
Comments