யால தேசிய பூங்கா ஜீப் சாரதிகளின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

யால தேசிய பூங்காவின் ஜீப் சாரதிகள் சிலர் முன்னெடுத்திருந்த எதிர்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
சபாரி ஜீப் வாகனங்கள் பதிவு செய்யப்படுவதை இரத்து செய்யுமாறு கோரி இன்று காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்படுமென அதிகாரிகள் உறுதியளித்த பின்னர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
யால தேசிய பூங்காவில் இதுவரையில் சபாரிக்காக 550 ஜீப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 100 ஜீப்கள் பதிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய கலந்துரையாடலின் பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படுமென யால தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.
32 Views
Comments