வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகளுக்கு புதிய வேலைத்திட்டம்

நாட்டில் நடத்திச் செல்லப்படும் வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்க கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார்.
தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழக கிளைகள் மற்றும் வளாகங்கள் நாட்டில் இயங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அவை தற்போது முதலீட்டு சபையில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார்.
13 Views
Comments