பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்; மியன்மார் செல்லும் முப்படை குழு

நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முப்படையினர் அடங்கிய குழுவினரை ஏற்றிய முதலாவது விசேட விமானம் மியான்மருக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
இதில் வைத்தியர்கள் குழு, மீட்புக்குழு, நிவாரணக் குழு ஆகியன அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் தொகையும் குறித்த விமானத்தில் கொண்டுசெல்லப்படவுள்ளது.
குறித்த விமானம் இன்று காலை 08 மணிக்கு மியன்மார் நோக்கி புறப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
20 Views
Comments