சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட மேலும் 12 வாகனங்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
06

சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட மேலும் 12 வாகனங்கள்

சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட மேலும் 12 வாகனங்கள்

சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்படாத நிலையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மேலும் 12 வாகனங்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டது.

 

ஜீப், Mitsubishi Montero ரக வாகனங்கள், Toyota ரக வாகனங்கள், Land Cruiser Prado ரக வாகனம், Nissan Double Cab உள்ளிட்ட வாகனங்கள் இதில் உள்ளடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்தது.

 

இந்த முறைகேடுகள் இடம்பெற்ற விதம் மற்றும் இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முறைகளின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.

 

அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தி சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட 15 வாகனங்களை ஏற்கனவே ஆணைக்குழு கைப்பற்றியதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

views

20 Views

Comments

arrow-up