பலபிட்டியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

பலபிட்டிய பகுதியில் நேற்று (17) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பலபிட்டிய ரேவத வித்தியாலயத்தை அண்மித்து நேற்று இரவு 09 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
யாரேனும் ஒரு நபரினால் வழங்கப்பட்ட அழைப்புக்கு அமைய துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான நபர் குறித்த வித்தியாலயத்திற்கு அருகில் சென்றுள்ளதுடன் அங்கு மறைந்திருந்த நபர் அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
7 Views
Comments