மஹஜன சம்பத் லொத்தர் சீட்டின் மூலம் மோசடி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
12

மஹஜன சம்பத் லொத்தர் சீட்டின் மூலம் மோசடி

மஹஜன சம்பத் லொத்தர் சீட்டின் மூலம் மோசடி

தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத் லொத்தர் சீட்டின் கடைசி 2 இலக்கங்களை பயன்படுத்தி  மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு பிபிலை நீதவான் நீதமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

மெதகம, மீகஹவகுர, மியனகந்துர ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சந்தேகநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

 

மஹஜன சம்பத லொத்தர் சீட்டின் கடைசி 2 இலக்கங்களை பயன்படுத்தி விற்பனை நிலையங்களை நடாத்துதல், அதனை வழிநடத்தல், அதற்கு உதவிசெய்தல் மற்றும் பங்களித்தல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

 

தேசிய லொத்தர் சபை என்பது லொத்தர் சீட்டுக்களின் ஊடாக தேசிய சிறுநீரக நிதியம், இராணுவ சேவை அதிகார சபை, விளையாட்டு அமைச்சு, ஷ்ரம வாசனா மற்றும் சமூர்த்தி நிதியம் ஆகியவற்றுக்கு திறைசேரி ஊடாக நிதி வழங்கும் பிரதான அரச நிறுவனமாகும்.

views

16 Views

Comments

arrow-up