அரச ஊழியர்களின் சம்பளம் - கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் எண்ணம் ரணிலைத் தவிர எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரிடமும் இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற "இயலும் சிறிலங்கா" செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வரி விகிதங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்து, வரிச் சதவீதத்தை திருத்துவது குறித்து இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், தொழில் அமைதி இல்லாத நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியாது என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
194 Views
Comments