எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
26

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை

 எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று(26) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் என ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 31ஆம் திகதி, செப்டம்பர் 1, 7, மற்றும் 8 ஆகிய சனி, ஞாயிறு தினங்களில் கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 முதல் 12ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

views

164 Views

Comments

arrow-up