பொலன்னறுவையில் புதையல் தோண்டிய நால்வர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
30

பொலன்னறுவையில் புதையல் தோண்டிய நால்வர் கைது

பொலன்னறுவையில் புதையல் தோண்டிய நால்வர் கைது

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய நகர் பிரதேசத்தில் பொலன்னறுவை வலய குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 69 வயதுக்கு இடைப்பட்ட பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைதான சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

views

79 Views

Comments

arrow-up