வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உதவித்தொகை 10 இலட்சமாக அதிகரிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
23

வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உதவித்தொகை 10 இலட்சமாக அதிகரிப்பு

வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உதவித்தொகை 10 இலட்சமாக அதிகரிப்பு

 "உங்களுக்கொரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  வீடொன்றுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகையை 10 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

 

வறிய அல்லது குறைந்த வருமானம் பெறுவோரின் வீட்டுப் பிரச்சினைக்கும் வறுமையை குறைக்கும் நோக்கிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

 

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறிய அல்லது குறைந்த வருமானம் பெறும் குடும்பமொன்றுக்கு முன்னுரிமையளித்து வீடொன்றை நிர்மாணிப்பதற்காக உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

 

தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவர் குறைந்தபட்சம் 550 சதுரஅடி கொண்ட வீட்டை நிர்மாணிக்க வேண்டுமென்பதுடன் அதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 6,500,00  ரூபா உதவித்தொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகை பயனாளியினால் செலுத்தப்பட வேண்டும்.

 

வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தில் ஒரு வீட்டுக்கான செலவு 11,470,00 ரூபாவாக காணப்பட்ட நிலையில் தற்போது அந்த செலவு 17,64000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் அரசின் உதவித்தொகைக்கு மேலதிகமாக எஞ்சிய தொகையை பங்களிப்புச் செய்ய பயனாளிகளுக்கான இயலுமை தற்போது இல்லாததால் தற்போது வீடொன்றுக்கு வழங்கப்படும் 6,500,00 ரூபா உதவித்தொகையை 10,000,00 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

views

39 Views

Comments

arrow-up