பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப்பெற உத்தரவு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
29

பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப்பெற உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப்பெற உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெறுவதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா பிறப்பித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 26ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக யாழ்.பிராந்தியத்திற்கு  பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதவானால் உத்தரவிடப்பட்டது.

 

கொழும்பு, பேஸ்லைன் பகுதியில் காரொன்றை விபத்திற்குட்படுத்தி சாரதியை தாக்கி காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தொடர்ச்சியாக நிராகரித்தமையால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

 

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அடுத்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

views

110 Views

Comments

arrow-up