கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய டிஜிட்டல் பொருளாதார ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியினால் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய நியமனத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய உலகின் பிரபல தொடர்பாடல் நிறுவனமான ஆஸியாட்டா(Axiata) குழுமத்தின் தொடர்பாடல் வர்த்தக நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியாவார்.
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதியிலிருந்து அந்தப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ள அவர் டிஜிட்டல் தொடர்பாடல் தொடர்பில் பிரித்தானியாவின் பிரிஸ்டல்(Bristol) பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
பிரித்தானிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியலாளராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய வோர்விக் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாக பட்டம் பெற்றுள்ளார்.
ஆசிய வலயத்தல் டிஜிட்டல் தொடர்பாடல் துறையில் புரட்சியை ஏற்படுத்த பல சேவைகளை அவர் ஆற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
140 Views
Comments