உயிர்த்த ஞாயிறு தினத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் முப்படைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று(17) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இந்த ஆலோசனையை விடுத்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பாதுகாப்பு செயலாளர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
8 Views
Comments