மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள மண்சரிவு தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு, காலி, கேகாலை, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
159 Views
Comments