AUG
14
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் பலி

காத்தான்குடி பிரதான வீதியில் நேற்றிரவு(130 இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் 19 வயதான இளைஞர் உயிழந்துள்ளார்.
இதன்போது காயமடைந்த மேலும் இருவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
169 Views
Comments