IMF கடன் சலுகையின் மூன்றாவது மீளாய்வு ஒத்திவைப்பு

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகையின் மூன்றாவது மீளாய்வு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெறுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு அதிகாரிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதிய(IMF) தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் புரூவர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அவர்கள் கலந்துரையாடியதுடன், இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகை 3 தவணைகளில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
169 Views
Comments