தபால்மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால்மூல வாக்களிப்பிற்கான தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாவட்ட செயலக, தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாருக்காக எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய அரச ஊழியர்கள் எதிர்வரும் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
162 Views
Comments