கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான ஒத்துழைப்பிற்காக சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
20

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான ஒத்துழைப்பிற்காக சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான ஒத்துழைப்பிற்காக சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று(18) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

 

சீனா மற்றும் இலங்கை இடையில் காணப்படும் நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தி புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் கூறினார்.

 

அத்துடன் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி, சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

 

இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய அதிவேக வீதியில் சீனாவிற்கு பொறுப்பான பகுதிகளை நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி விநியோக மத்தியஸ்தானம் மற்றும் நிறுவன வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும் பல்வேறு காரணங்களுக்காக இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் சமுத்திர ஆய்வுப்பணிகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் உப தலைவர் இதன்போது கூறினார்.

 

இதனை தவிர ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலகளவில் இலங்கைக்கு மிகச்சிறந்த பிரவேசத்தை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதுடன், எதிர்வரும் காலங்களில் சீனாவிற்கான விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதியை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

views

87 Views

Comments

arrow-up