5 மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
17

5 மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை

5 மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் சில மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச்சுட்டெண் அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதனடிப்படையில் அதிக வெப்பமான வானிலை நிலவும் காலப்பகுதியில் போதுமானளவு குடிநீரை பருகுமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதனைத்தவிர குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளர்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

views

83 Views

Comments

arrow-up