நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
11

நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று(10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அந்தவகையில்,

டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

 

பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

views

48 Views

Comments

arrow-up