கனேமுல்ல சஞ்ஜீவ கொலைச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை Skype ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

கனேமுல்ல சஞ்ஜீவ கொலைச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒன்பது பேர் தொடர்பான வழக்கு விசாரணையை இன்று காணொளி (Skype) ஊடாக முன்னெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு பதிவாளரினால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு நீதவானினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 11 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டதரணிபோல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்த பிரதான சந்தேகநபர் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் உள்ளனர்.
கொழும்பு இலக்கம் ஐந்து மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கனேமுல்ல சஞ்ஜீவ, கடந்த 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
40 Views
Comments