இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
01

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

 

எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டுள்ளது.

 

நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டதுடன், இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும், கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் இன்று (1) சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளன .

 

கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும் கன மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்துள்ளது.

 

தற்போது வினாடிக்கு 1000 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, அலுத்ஓயா குளத்தின் நீர்மட்டம் 8 அடியாக உயர்ந்துள்ளதால், அதனுடைய ஆறு வான் கதவுகள் அரை அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

views

38 Views

Comments

arrow-up