யாழில் மனைவி செய்த காரியத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
23

யாழில் மனைவி செய்த காரியத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு

யாழில் மனைவி செய்த காரியத்தால் கணவன் எடுத்த விபரீத முடிவு

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தவறான முடிவெடுத்த ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

குறித்த சடலம் இன்றையதினம்(22.02.2025) மீட்கப்பட்டதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ம.பாலகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

 

இதனை அவதானித்த அவரது உறவுகள் இது குறித்து மானிப்பாய் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

 

இதையடுத்து, அவரது சடலமானது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவரது மனைவி அதிக கடன் பெற்றதன் காரணமாகவே குறித்த நபர் மனவிரக்தியில் உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

மேலும், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

views

36 Views

Comments

arrow-up