அமெரிக்காவில் முதன் முதலாக உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்தியர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
23

அமெரிக்காவில் முதன் முதலாக உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்தியர்

அமெரிக்காவில் முதன் முதலாக உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்தியர்

மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) புதிய பணிப்பாளராக காஷ் படேல்(Kash Patel) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய(india) வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட்சபை, காஷ் படேலின் வேட்புமனுவை பெருமளவில் அங்கீகரித்ததை அடுத்து, வியாழக்கிழமை செனட்டால் காஷ் படேல் உறுதிப்படுத்தப்பட்டார்.

 

காஷ் படேல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(donald trump) நெருங்கிய கூட்டாளி. டிரம்ப் அவரை எஃப்.பி.ஐ. தலைவராகப் பரிந்துரைத்தார். அதன்படி, அது செனட்டின் ஒப்புதலைப் பெற்றது.

 

அதன்படி, காஷ் படேல், மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) முதல் இந்திய வம்சாவளி பணிப்பாளராக பதவியேற்க உள்ளார்.

 

காஷ் படேல் 1980 இல் பிறந்தார். அவரது தாயும் தந்தையும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பு, படேல் தென்னாபிரிக்காவில் வளர்ந்தார்.

 

படேல் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் சட்ட பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றுள்ளார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், உளவுத்துறைக்கான ஹவுஸ் நிரந்தரத் தேர்வுக் குழுவின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 

views

38 Views

Comments

arrow-up