சிக்கன்குன்யா நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் சிக்கன்குன்யா நோயாளர்கள் பதிவாகும் வீதம் கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களில் பதிவான மழையுடனான வானிலையினால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் உயர்வடைந்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார்.
நுளம்பு பெருக்கம் அதிகம் காணப்படும் பகுதிகளில் அவதானமாக செயற்படுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
50 Views
Comments