புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; அடிப்படை உரிமை மனு தாக்கல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
16

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; அடிப்படை உரிமை மனு தாக்கல்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; அடிப்படை உரிமை மனு தாக்கல்

சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்ததையடுத்து இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும் 3 வினாக்களே வௌியாகியிருந்ததாகவும் அவற்றுக்கான புள்ளிகள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று(14) தெரிவித்திருந்தார்.

அத்துடன், பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

views

123 Views

Comments

arrow-up