ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அரசியல் கட்சி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான "ஐக்கிய ஜனநாயக குரல்" எனும் புதிய அரசியல் கட்சி கொழும்பில் இன்று(09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
தனது தலைமையில் கட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாக ரஞ்சன் ராமநாயக்க இதன்போது கூறினார்.
3 தடவைகள் பாராளுமன்றத்திற்கு தெரிவான போதிலும் சில நடவடிக்கைகளால் தனக்கான குடியுரிமை நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் இலச்சினையாக ஒலிவாங்கியே வழங்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார்.
இதனூடாக குரலற்ற மக்களுக்கு குரலாக செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம் டில்ஷான் இந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்படவுள்ளதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷூம் கட்சியில் இணைந்துள்ளார்.
125 Views
Comments