காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
16

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தம்

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து இடைநிறுத்தம்

கடும் மழையுடனான வானிலையால் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடல் சீற்றத்தினால் இந்த கப்பல் போக்குவரத்து இன்றும்(15) நாளையும்(16) நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

எனினும், 2 நாட்களுக்கு பின்னர் கடல் சீற்றம் தொடர்பில் அவதானித்த பின்னரே தொடர்ந்து கப்பலை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.

views

108 Views

Comments

arrow-up