2 கிலோகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
29

2 கிலோகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

2 கிலோகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

முல்லேரியா - உடஹமுல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக கூறப்படும் 667,000 ரூபா பணம், கார், 3 தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

சந்தேகநபர் முல்லேரியாவைச் சேர்ந்த 41 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

வௌிநாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் குறித்த சந்தேகநபர் வழிநடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

views

62 Views

Comments

arrow-up