ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும் மூத்த அரசியல்வாதியுமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும் மூத்த அரசியல்வாதியுமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் இன்று(28) காலமானார்.
சுகவீனம் காரணமாக அவர் தனது 80ஆவது வயதில் அக்கரைப்பற்று இல்லத்தில் இன்று காலை காலமானார்.
அரசியல் தலைவர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட வேதாந்தி சேகு இஸ்ஸதீன் 1986 ஆம் ஆண்டு மறைந்த அரசியல் தலைவர் அஷ்ரப் உடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார்.
அத்துடன், இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும் அன்னார் பதவி வகித்திருந்தார்.
2001 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இந்த காலப்பகுதியில் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் தகவல், வெகுசன ஊடக பிரதி அமைச்சராகவும் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் செயற்பட்டுள்ளார்.
சட்டத்தரணியான சேகு இஸ்ஸதீன் தமது பாடசாலை நாட்களில் நாடகங்களில் பாத்திரமேற்று நடிப்பதும் இலக்கிய படைப்புகளும் அவரது பிரதான அடையாளமாக காணப்பட்டன.
இந்தநிலையில், அன்னாரின் ஜனாஸா அக்கரைப்பற்று சின்ன பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையின் பின்னர் தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
113 Views
Comments