2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
02

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் கால அட்டவணை வெளியானது..!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கால அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

அதன் படி, இரண்டாவது வினாத்தாள் (Part II) செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதல் வினாத்தாள் பரீட்சை (Part I) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், 2,649 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பரீட்சைக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று (02) முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் திருத்தம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

views

174 Views

Comments

arrow-up